Wednesday, May 12, 2021
Home ராசிபலன்கள் இன்றைய ராசிபலன்: 20.02.2021 சனிக்கிழமை சார்வரி வருடம் மாசி மாதம் 08ம் தேதி, மேல்நோக்குநாள்.

இன்றைய ராசிபலன்: 20.02.2021 சனிக்கிழமை சார்வரி வருடம் மாசி மாதம் 08ம் தேதி, மேல்நோக்குநாள்.

திதி : பிற்பகல் 12.30 வரை அஷ்டமி பின்பு நவமி

நட்சத்திரம் : காலை 05.13 வரை கிருத்திகை பின்பு ரோகிணி

யோகம் : காலை 05.13 வரை சித்தயோகம் பின்பு காலை 06.32 வரை மரணயோகம் அதன் பின்பு அமிர்தயோகம்

நல்ல நேரம் : காலை 07.30 – 08.30 மாலை 04.30 – 05.30

கும்ப லக்னம் இருப்பு : 03 நாழிகை 36 வினாடி

மேஷம் : குடும்ப உறுப்பினர்களின் வருகையால் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். வாகனங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான இன்னல்கள் குறையும்.

ரிஷபம் : பணிபுரியும் இடத்தில் திருப்திகரமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முயற்சிகள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இளைய சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும்.

மிதுனம் : குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பகைமை குறையும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உண்மை நிலையை அறிந்து முடிவெடுப்பது நல்லது.

கடகம் : மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் எண்ணிய வெற்றி கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். தொழிலில் நண்பர்களின் ஒத்துழைப்பின் மூலம் லாபம் ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

சிம்மம் : குடும்ப உறுப்பினர்களுக்கிடையே மனமகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். மனதில் பலதரப்பட்ட எண்ணங்களின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ப உயர்வும், பொறுப்புகளும் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.

கன்னி : உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். தந்தையின் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலைகள் மற்றும் இன்னல்கள் குறையும். தேவையற்ற செலவுகளை குறைத்து சேமிப்பது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவும், மாற்றமான சூழ்நிலைகளும் உண்டாகும்.

துலாம் : தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களின் மூலம் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மையளிக்கும்.

விருச்சிகம் : கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் சுபவிரயங்கள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களை சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வீட்டு தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு : நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

மகரம் : மனதில் புதிய ஆசைகள் தோன்றும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், மேன்மையான வாய்ப்புகளும் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.

கும்பம் : எதிர்பார்த்த தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் கூட அலைச்சலுக்கு பின்பே நிறைவேறும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனத்தில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும்.

மீனம் : எந்தவொரு செயலையும் உற்சாகத்தோடு செயல்பட்டு எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மனதில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் செய்யும் முயற்சிகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments