Wednesday, May 12, 2021
Home ராசிபலன்கள் இன்றைய ராசிபலன்: 19.03.2021 வெள்ளிக்கிழமை சார்வரி வருடம் பங்குனி மாதம் 06ம் தேதி, கீழ்நோக்குநாள்.

இன்றைய ராசிபலன்: 19.03.2021 வெள்ளிக்கிழமை சார்வரி வருடம் பங்குனி மாதம் 06ம் தேதி, கீழ்நோக்குநாள்.

12 ராசிகளுக்கும் சிறப்பாக கணிக்கப்பட்ட பலன்கள்

திதி : அதிகாலை 01.01 வரை பஞ்சமி பின்பு சஷ்டி

நட்சத்திரம் : பிற்பகல் 12.23 வரை கிருத்திகை பின்பு ரோஹிணி

யோகம் : காலை 06.20 வரை மரணயோகம் பின்பு பிற்பகல் 12.23 வரை சித்தயோகம் அதன் பின்பு மீண்டும் மரணயோகம்

நல்ல நேரம் : காலை 09.30 – 10.30 மாலை 04.30 – 05.30

மீன லக்னம் இருப்பு : 03 நாழிகை 34 வினாடி

மேஷம் : பொருளாதார மேன்மை உண்டாகும். உறவுகளிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறமையால் லாபம் உண்டாகும். மனைகளின் மூலம் தனவரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் குறையும்.

ரிஷபம் : உயர் பதவிக்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் எண்ணிய செயல்கள் ஈடேறும். விவாதங்களில் சாதகமான சூழல் உண்டாகும். வேளாண்மையில் இருந்துவந்த தேக்கநிலை நீங்கும். மனதில் புதுவிதமான புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

மிதுனம் : பொருள் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் வட்டம் அதிகரிக்கும். நெருக்கமான உறவினர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அருள்தரும் வேள்விகளில் பங்கு பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசு சம்பந்தமான பணிகளில் இருந்துவந்த இழுபறியான பிரச்சனைகள் நீங்கும்.

கடகம் : செய்தொழிலில் உயர்வு உண்டாகும். சபைகளில் தனக்கான ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிநாடு மற்றும் வெளியூர் தொழில் முயற்சிகளில் சாதகமான சூழல் உண்டாகும். நிர்வாகத்துறையில் உள்ளவர்களுக்கு கீர்த்தி ஏற்படும். சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும்.

சிம்மம் : கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த மேன்மை உண்டாகும். தூரதேசத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் சுமூகமாக தீரும். எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.

கன்னி : நிர்வாகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனைகளால் லாபம் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களால் மதிப்புகள் அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். பொதுநலத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

துலாம் : புதிய நபர்களால் தேவையற்ற சிறு பிரச்சனைகள் உண்டாகும். செயல்பாடுகளில் மந்தநிலை ஏற்படும். பணி தொடர்பான கோப்புகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். தொழில் தொடர்பான வீண் அலைச்சல்கள் உண்டாகும்.

விருச்சிகம் : கூட்டாளிகளின் மூலம் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வருகையினால் மகிழ்ச்சி அடைவீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான உதவிகள் கிடைக்கும். உயர் பதவி பெறுவதற்கான சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும்.

தனுசு : சக ஊழியர்களிடம் நிதானம் வேண்டும். பயணங்களின்மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகள் அகலும். கடன் தொடர்பான உதவிகள் கிடைக்கும். பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் நுணுக்கங்களை அறிவீர்கள். உறவினர்கள் சம்பந்தப்பட்ட கவலைகள் மேலோங்கும்.

மகரம் : நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு அறிவுக்கூர்மை வெளிப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

கும்பம் : எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். நண்பர்களுடனான வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் தனலாபம் உண்டாகும்.

மீனம் : பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments