Wednesday, May 12, 2021
Home ராசிபலன்கள் இன்றைய ராசிபலன்: 18.02.2021 வியாழக்கிழமை சார்வரி வருடம் மாசி மாதம் 06ம் தேதி, கீழ்நோக்குநாள்.

இன்றைய ராசிபலன்: 18.02.2021 வியாழக்கிழமை சார்வரி வருடம் மாசி மாதம் 06ம் தேதி, கீழ்நோக்குநாள்.

திதி : காலை 08.26 வரை சஷ்டி பின்பு சப்தமி

நட்சத்திரம் : அதிகாலை 00.08 வரை அஸ்வினி பின்பு பரணி

யோகம் : அதிகாலை 00.08 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம்

நல்ல நேரம் : பிற்பகல் 12.30 – 01.30 மாலை 06.30 – 07.30

கும்பலக்னம் இருப்பு : 03 நாழிகை 56 வினாடி

மேஷம் : குடும்பத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் அனுகூலம் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை வாங்கும் பொழுது தகுந்த ஆலோசனைகளை பெற்று முதலீடுகளை செய்யவும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

ரிஷபம் : மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். முக்கிய முடிவுகளை அவசரமின்றி பொறுமையுடன் எடுப்பது நல்லது. உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். மனதில் தோன்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது நல்லது. புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்

மிதுனம் : பழைய கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். வியாபாரம் தொடர்பான புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். குழந்தைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் உண்டாகும்.

கடகம் : தாய்வழி உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வீடு மற்றும் வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதம் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம் : உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறையால் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும். போட்டி, பந்தயங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

கன்னி : எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த செய்திகள் காலதாமதமாக கிடைக்கும்.

துலாம் : மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு மேம்படும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்  : உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மற்றவர்களுக்காக சில பணிகளை செய்து முடிப்பீர்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். துணிச்சலான சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் உடல்நலனில் கவனம் வேண்டும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் கிடைக்கும். அனுபவமிக்க வேலையாட்களை நியமிப்பீர்கள்.

தனுசு : நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் தொடர்பான செயல்களில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நுணுக்கமான சில விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். முயற்சிக்கேற்ப பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

மகரம் : அரசாங்கத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். கூட்டாளிகளின் ஆதரவின் மூலம் லாபம் மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நிம்மதி உண்டாகும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும்

கும்பம் : மனதில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பதற்கான தன்னம்பிக்கை அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளை விரைந்து முடிப்பதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பிரபலமானவர்களின் உதவிகள் மூலம் லாபம் அதிகரிக்கும்.

மீனம் : குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வாக்குறுதிகளை கொடுக்கும்போது சிந்தித்து செயல்படவும். வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் விமர்சனங்கள் ஏற்பட்டு மறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments