Wednesday, May 12, 2021
Home ராசிபலன்கள் இன்றைய ராசிபலன்: 20.03.2021 சனிக்கிழமை சார்வரி வருடம் பங்குனி மாதம் 07ம் தேதி, மேல்நோக்குநாள்.

இன்றைய ராசிபலன்: 20.03.2021 சனிக்கிழமை சார்வரி வருடம் பங்குனி மாதம் 07ம் தேதி, மேல்நோக்குநாள்.

12 ராசிகளுக்கும் சிறப்பான முறையில் கணிக்கப்பட்ட பலன்கள்

திதி : அதிகாலை 02.59 வரை சஷ்டி பின்பு சப்தமி

நட்சத்திரம் : பிற்பகல் 02.42 வரை ரோகிணி பின்பு மிருகசீரிஷம்

யோகம் : காலை 06.20 வரை மரணயோகம் பின்பு பிற்பகல் 02.42 வரை அமிர்தயோகம் அதன் பின்பு சித்தயோகம்

நல்ல நேரம் : காலை 10.30 – 11.30 மாலை 04.30 – 05.30

மீன லக்னம் இருப்பு : 03 நாழிகை 23 வினாடி

மேஷம் : வியாபாரத்தில் புதிய நபர்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ள மறைமுக எதிர்ப்புகள் குறையும். பயணங்களால் லாபம் உண்டாகும்.

ரிஷபம் : வேலையாட்களின் மூலம் எண்ணிய செயல்கள் ஈடேறும். புதிய இலக்கை நிர்ணயிப்பீர்கள். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். மனதில் தெளிவான எண்ணங்களால் செயல்களில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான சூழல் உண்டாகும்.

மிதுனம் : உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேம்படும். தேவையற்ற பேச்சுக்களை குறைப்பதன் மூலம் சாதகமான செயல்கள் நடைபெறும். அலைச்சல்களின் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

கடகம் : ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். பயணங்களில் நிதானம் வேண்டும்.

சிம்மம் : தொழில் சம்பந்தமான முக்கிய மாற்றங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான சூழல் ஏற்படும். எண்ணிய பணிகளை முடிப்பதற்கு சிறிது அலைச்சல்கள் உண்டாகும். அரசு அதிகாரிகளிடம் ஆதாயம் ஏற்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

கன்னி : திருமணம் சம்பந்தமான சுபச்செயல்கள் கைகூடும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த இடையூறுகள் மறையும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். ஆடைச்சேர்க்கை உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

துலாம் : புதிய முதலீடுகளில் சற்று சிந்தித்து செயல்படவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமை வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி உண்டாகும்.

விருச்சிகம் : நினைத்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். வாகனப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும்.

தனுசு : உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழல் ஏற்படும். மனதை உறுத்திக்கொண்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். வர்த்தகத்தில் எதிர்பார்த்த சுப செய்திகள் கிடைக்கும்.

மகரம் : நண்பர்களின் ஆதரவால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

கும்பம் : உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப நபர்களிடம் அமைதியுடன் செயல்படவும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் சோர்வு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாகும். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நல்லது. பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும்.

மீனம் : பணியில் மேன்மைக்கான முயற்சிகள் சாதகமாகும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். அரசு பணிகளில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments