Wednesday, May 12, 2021
Home ஐபிஎல் ஐபிஎல் ஏலம்: கவனம் ஈர்த்த தமிழக வீரர், 5.25 கோடிக்கு அள்ளிய பஞ்சாப் கிங்ஸ்!.

ஐபிஎல் ஏலம்: கவனம் ஈர்த்த தமிழக வீரர், 5.25 கோடிக்கு அள்ளிய பஞ்சாப் கிங்ஸ்!.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.

சையது முஷ்டாக் அலி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் ஷாருக்கான் ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது, இன்று நடைபெறும் ஏலத்தில் 292 வீரா்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்களில் 164 போ் இந்தியா்கள், 125 போ் வெளிநாட்டு வீரா்கள். 3 போ் அசோசியேட் நாடுகளின் வீரா்கள். 292 வீரர்களில் இருந்து 22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்களை அணிகள் தேர்வு செய்து கொள்ளவேண்டும்.

8 அணிகளிலும் சேர்த்து மொத்தம் 61 வீரர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியில் 11 இடங்களும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியில் 3 இடங்களும் காலியாக உள்ளன.

கையிருப்பு தொகையைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் ரூ.53.20 கோடியும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியிடம் ரூ.10.75 கோடியும் உள்ளன.

ஏலப்பட்டியலில் ஷாருக் கான், எம்.சித்தார்த், ஹரி நிஷாந்த், சோனு யாதவ், அருண் கார்த்திக், ஜி.பெரியசாமி, பாபா அபராஜித், எம்.முகமது உள்ளிட்ட தமிழக வீரர்கள் 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இன்று நடைபெற்ற இந்த ஏலத்தில் ஆச்சரியப்படும் விதமாக, தமிழக வீரர் ஷாருக்கான் ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ரூ. 20 லட்சம் அடிப்படை விலையில் தொடங்கிய ஏலத்தின் இறுதியில் 5.25 கோடிக்கு பஞ்சாப் அணியின் மூலம் ஏலம் எடுக்கப்பட்டார்.

சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி தொடரில் தமிழக அணியில் இடம்பெற்ற ஷாருக்கான், ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஆடி பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் இந்த முறை தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments