Wednesday, May 12, 2021
Home Blog Page 6

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை: அதிர்ச்சியில் ரசிகர்கள்!.

0

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா (28), பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை.

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் தற்போது விஜய் டீவியில் ஓளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் என்கிற மெகா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஒரு வாரமாக தொடர்சியாக கன மழை பெய்து வருவதால் படப்பிடிப்பிற்கு செல்வதில் தாமதம் ஏற்படுவதாக கூறி படப்பிடிப்பு தளத்திற்கு அருகில், பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி படப்படிப்பில் கலந்து கொண்டுள்ளார். அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் அவரது வருங்கால கணவர் ஹேம்நாத் என்பவரும் தங்கியிருந்துள்ளார்.

சமீபத்தில் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது, இன்னும் சில மாதங்களில் ஹேம்நாத்துடன் தனக்கு திருமணம் நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகை சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராஜராஜன் சதயவிழா 1035: உடையாளூர் பள்ளிப்படையில் சோழ வாரிசுகளின் தலைமையில் குதூகலவிழா!.

0

தமிழக மன்னர்களில் பேரரசனாக விளங்கிய இராஜகேசரி இராஜராஜ சோழன் என்கிற அருள்மொழி வர்மனுக்கு உடையாளூர் கிராம மக்களும், சிவபாதசேகரன் சதய விழா குழுவினரும் இணைந்து சதய விழா எடுத்து சிறப்பித்துள்ளனர்.

தரணி ஆண்ட பேரரசன் இராஜராஜனுக்கு தஞ்சையில் விழா எடுப்பது அனைவரும் அறிந்ததே. உடையாளூர் என்கிற பழையாறையில் கடந்த சில வருடங்களாக இராஜராஜ சோழனுக்கு சதயவிழா நடந்து வருகிறது. கடந்த வருட சதயவிழாவின் போது சிவபாதசேகரன் சதய விழா குழுவினரின் முயற்சியால் இராஜராஜனுக்கு பஞ்ச உலோகங்களினால் ஆன ஐம்பொன் சிலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாதம் வளர்பிறை சதய நட்சத்திரத்தில் பிறந்த அருள்மொழி வர்மன், இராஜகேசரி இராஜராஜ சோழன் என்ற பெயரால் பட்டம் சூட்டப்பட்டதும் சதய நட்சத்திர தினத்தில்தான் என்பதால் இராஜராஜ சோழனுக்கு ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சதய நட்சத்திர தினத்தில் சிறப்பான முறையில் சதயவிழா நடத்தி வருகின்றனர்.

உடையாளூர் சதயவிழாவின் முக்கியத்துவம்

சோழர்களின் வரலாறு முழுக்க ஆராயும் போது, ஒவ்வொரு காலகட்டத்திலும் சோழர்களின் தலைநகரம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது புலனாகும். பூம்புகார் தொடங்கி உறையூர், பழயாறை, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் இன்றைய பிச்சாவரம் வரை அந்த பட்டியல் நீளும்.

பிற்கால சோழர்களின் முதல்வன் விஜயாலய சோழன் தஞ்சையை கைப்பற்றி தனது தலைநகரை தஞ்சை அரண்மனைக்கு மாற்றுவதற்கு முன்னால் பழையாறை என்கிற இன்றைய உடையாளூர் சோழர்களின் தலைநகரமாக இருந்து வந்துள்ளது. இராஜராஜ சோழன் காலம் வரையிலும் பழையாறைக்கு முக்கியத்துவம் இருந்தது, கீழ் திசை முழுவதும் கட்டியாண்ட மதுராந்தகன் என்கிற கோப்பரகேசரி முதலாம் இராஜேந்திர சோழன் முடிசூட்டு விழாவிற்கு பிறகு பழையாறை அரண்மனைக்கு ஒய்வெடுக்க சென்ற இராஜராஜ சோழன் அங்கேயே மரணமடைந்ததால் பள்ளிப்படை கட்டப்பட்டதாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன.

இராஜராஜ சோழன் பள்ளிப்படை கட்டப்பட்ட அன்றைய “பழையாறை” இன்றைய உடையாளூரில், சோழ வாரிசுகளான ராணி சாந்திதேவி ஆயாள் முன்னிலையில் இளவரசர் மன்னர் மன்னன் தலைமையில் புலிக் கொடி ஏற்றப்பட்டு சதயவிழா தொடங்கியது. காலை 6.00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் உடையாளூரை சேர்ந்தவர்களும் பல்வேறு ஊர்களில் இருந்து சென்றவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கொடியேற்றத்திற்கு பின்பு பள்ளிப்படையில் கணபதி ஹோமம், அஸ்திர ஹோமம், ருத்ர ஹோம் முதலான ஹோமங்கள் நடந்தன, மங்கள் வாத்தியங்கள் முழங்க 108 வலம்புரி சங்குகளால் சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு இராஜராஜ சோழனின் சதயவிழா குதூகலமாக கொண்டாடப்பட்டது.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை : அக்னி பிழம்பாய் காட்சியருளிய அருணாச்சலேசுவரர்!

0

இந்தப் பிரபஞ்சம் இயங்க ஐந்து பெரும் சக்திகள் தேவை. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற இந்த பிரிவுகளை பஞ்சபூதம் என்று சொல்கிறார்கள். பிரிதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற இந்த ஐந்து பஞ்ச பூதங்களுக்கும் தலம் அமைத்து வழிபட்டு நம்முன்னோர் ஆனந்த பரவசம் எய்தினர்.

இவற்றில் ‘தீ’ என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை, நம் முன்னோர் வழிபட்டனர். அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன், அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது. சைவ சமயத்தில் நினைத்தாலே முக்தி தரக் கூடியத் தலமாக திருவண்ணாமலை உள்ளது.

பிரம்மாவும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர்? என்று சண்டையிட்டுக் கொண்டபோது, சிவபெருமான் அக்னி தூணாக நின்றார். அவருடைய அடியைத் தேடி, திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா, சிவபெருமானின் முடியைத் தேடி, அன்ன வாகனத்தில் பறந்து சென்றார். இவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடிமுடியைக் காண முடியவில்லை என்பது இத்தலத்தின் தலப் புராணமாகும்.

வள்ளாள மகாராஜாவின் ஈமக்கிரியைகளை அருணாசலேசுவரரே செய்து வருதல்

 எல்லா நற்குணங்களும் நிரம்பியவர் வள்ளாள மகாராஜா என்று அருணாசல புராணம் கூறுகிறது. நேர்மை, கொடைத்தன்மை மற்றும் அருணாசலேசுவரர் மீது அளவிலா பற்று கொண்டவர் இவர். இம்மன்னருக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை இவருடைய பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான் இவருக்கும் இவர் மனைவிக்கும் குழந்தையாக தோன்றினார்.

இறைவனின் அருளை வியந்து இத்தம்பதியினர் அக்குழந்தையைத் தழுவும் போது இறைவன் மறைந்து விட்டார். பின்னர் இறைவனிடம் தன் மனக்குறையை வெளிப்படுத்திய போது, இறைவன் அவருக்கு காட்சியளித்து மன்னர் தன் கடமைகளை சரிவர செய்து வர வேண்டுமென்றும் அவருடைய ஈமக்கிரியைகளை தானே செய்வதாகவும் வாக்களித்தார்.

இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதத்தில் வள்ளாள மகாராஜாவின் திதி நாளன்று அருணாசலேசுவரர் பள்ளிகொண்டாபட்டு என்ற கிராமத்தில் எழுந்தருளி மிகுந்த சம்பிரதாயங்களுடன் ஈமக்கிரியைகள் செய்வது வழக்கம். இவ்விழாவிற்கு மாசிமகம் தீர்த்தவாரி என்று பெயர்.

பெரும்பாலான திருத்தலங்களில் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு. ஆனால் திருவண்ணாலையில் மலையே தெய்வமாகவும் வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது.

திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள்.

மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் திருவெம்பாவை (20) பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம்.

திருவண்ணாமலை சிவாலயத்தில் ஆண்டுக்கு நான்கு முறை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இவற்றுள் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற பிரம்மோற்சவம் சிறப்பானதாகும். இந்தப் பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் பத்தாம் நாள் கார்த்திகை தீபத் திருநாளாகும். இச்சிவாலயத்தில் கார்த்திகை தீப நாளான்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. அந்நாளில் சிவாலயத்திற்கு வந்து, திருவண்ணாமலையை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். மலையின் உச்சியில் இந்தத் தீபம் ஏற்றப்படுகிறது. இதனை மகா தீபம் என்று அழைக்கின்றனர்.

கார்த்திகை தீபத் திருநாளன்றும், முழுநிலவு நாட்களிலும் சிவ பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருகிறார்கள். இதனை மலைவலம் என்று அழைக்கின்றனர். பக்தர்கள் வலம் வருகின்ற கிரிவலப் பாதைகள் இரண்டு உள்ளன.

இறைவன் பெயர் – அண்ணாமலையார் (அருணாசலேச்சுவரர்)
இறைவி பெயர் – உண்ணாமுலை அம்மன் (அபீதகுஜலாம்பாள்)
புகழ் பெற்ற விழா – திருகார்த்திகை தீபம்
விழா காலம் – கார்த்திகை மாதம்.