Wednesday, May 12, 2021
Home Blog Page 3

இன்றைய ராசிபலன்: 11.02.2021 வியாழக்கிழமை சார்வரி வருடம் தை மாதம் 29ம் தேதி, அமாவாசை.

0

திதி : அதிகாலை 01.29 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை

நட்சத்திரம் : பிற்பகல் 02.35 வரை திருவோணம் பின்பு அவிட்டம்

யோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்

நல்ல நேரம் : காலை 10.30 – 11.30 மாலை 06.30 – 07.30

மகர லக்னம் இருப்பு : 00 நாழிகை 21 வினாடி

மேஷம் :மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் சற்று பொறுமை வேண்டும். பத்திரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை விட மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் தெளிவு கிடைக்கும்.

ரிஷபம் : குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். எண்ணிய செயல்களை செய்து முடிக்க கூடுதல் முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். மற்றவர்களை பற்றி குறை கூறாமல் இருப்பது நல்லது. உழைப்பிற்கேற்ற முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

மிதுனம் : உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆடம்பர பொருட்களை தவிர்ப்பதன் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மனதில் தோன்றக்கூடிய சந்தேகங்களை உடனுக்குடன் போக்கிக்கொள்வதன் மூலம் மேன்மை உண்டாகும்.

கடகம் : எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். எண்ணிய காரியங்களில் இருந்துவந்த தடைகள் அகலும். உடனிருப்பவர்களுக்கிடையே மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் சோர்வும், மனக்குழப்பமும் அகலும். வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

சிம்மம் : உறவினர்களிடம் எதிர்பார்த்த மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் நன்மை உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பமான எண்ணங்கள் அகலும். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் உயர் அதிகாரிகளின் ஆதரவால் குறையும். வியாபார அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனைகள் கிடைக்கும்.

கன்னி : புதிய தொழில் தொடர்பான செயல்பாடுகளில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். உறவினர்கள் கூறும் கருத்துக்களுக்கு நிதானமாக செயல்படுவது நன்மையளிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் சிறு சிறு குழப்பங்களும், காலதாமதமும் ஏற்படும். மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளின் மூலம் சோர்வு உண்டாகும். வியாபாரம் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

துலாம் : உடல் ஆரோக்கியத்தில் மேன்மை ஏற்படும். எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும்.

விருச்சிகம் : பிள்ளைகளுக்கு தேவையான ஆடை, அணிகலன்களை வாங்கி கொடுப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திருப்தியான சூழல் உண்டாகும்.  விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். திட்டமிட்ட காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு மாற்றமான சூழல் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும்.

தனுசு : மனதில் சோர்வின்றி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சுற்றுலா பயணங்களை மேற்கொள்வீர்கள். நற்பெயர்களால் கீர்த்தி உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும்.

மகரம் : உத்தியோகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்கு சென்று வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். தாய்வழி உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பயணங்களின்போது எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். எதிர்பாராத வீண் செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

கும்பம் : குடும்ப உறுப்பினர்களிடம் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். எதையும் தைரியமாக செய்து பாராட்டுகளை பெறுவீர்கள். கேளிக்கைகள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். சகோதரர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் குறையும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும்.

மீனம் : தனவரவுகள் சாதகமாக அமையும். இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த தேவையற்ற கவலைகள் குறையும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

இன்றைய ராசிபலன்: 10.02.2021 புதன்கிழமை சார்வரி வருடம் தை மாதம் 28ம் தேதி, சிவராத்திரி.

0

திதி : அதிகாலை 02.21 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 02.35 வரை உத்திராடம் பின்பு திருவோணம்

யோகம் : காலை 06.34 வரை சித்தயோகம் பின்பு பிற்பகல் 02.35 வரை அமிர்தயோகம் அதன் பின்பு மீண்டும் சித்தயோகம்

நல்ல நேரம் : காலை 10.30 – 11.30 மாலை 06.30 – 07.30

மகர லக்னம் இருப்பு : 00 நாழிகை 31 வினாடி

மேஷம் : உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உடனிருப்பவர்களின் ஆதரவினால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ரிஷபம் : பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் படிப்படியாக அகலும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். வெளிவட்டார தொடர்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும்.

மிதுனம் : மனதில் நினைத்த காரியங்களை செய்வதில் காலதாமதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியமாகும். உடனிருப்பவர்களிடம் மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் பகிர்வதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை கவனத்துடன் கையாளவும்.

கடகம் : கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுபகாரியத்தில் கலந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இழந்த வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

சிம்மம் : பழைய கடன் தொடர்பான விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்கள் கைகூடும். அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த உதவிகளின் மூலம் அபிவிருத்திக்கான சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும்.

கன்னி : உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வது தொடர்பான சிந்தனைகள் மனதில் தோன்றும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வமும், பாராட்டுகளும் மேம்படும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

துலாம் : பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. வாகனம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். சிறு சிறு அதிர்ஷ்ட வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். சுயதொழில் தொடர்பான அரசு சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.

விருச்சிகம் : வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் சிலருக்கு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுகமான பிரச்சனைகள் அகலும். திட்டமிட்ட காரியங்களில் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை அடைவீர்கள். எதிர்பாராத சிலரின் அறிமுகத்தின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும்.

தனுசு : மனதில் கற்பனைத்திறன் அதிகரிக்கும். வாக்குத்திறமைகளின் மூலம் பொருள் ஆதாயம் அடைவீர்கள். மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம் : குடும்ப உறுப்பினர்களின் மூலம் தனவரவுகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். தொழில் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். நண்பர்களின் உதவிகளால் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும்.

கும்பம் : எதிர்பாராத செய்திகளின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். மனதில் தேவையற்ற கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்பட வேண்டும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். திடீர் வெளியூர் பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் சிறு தடைகளுக்கு பின் சாதகமான செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் விழிப்புணர்வு வேண்டும்.

மீனம் : மனதில் நினைத்த காரியங்களை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகளை வாங்கும் எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் ஈடேறும். பிள்ளைகளுக்கு வரன் தொடர்பான செய்திகள் சாதகமாக அமையும். உறவினர்களின் வழியில் சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.

இன்றைய ராசிபலன்: 09.02.2021 செவ்வாய்கிழமை சார்வரி வருடம் தை மாதம் 27ம் தேதி, பிரதோஷம்.

0

திதி : அதிகாலை 03.37 வரை திவாதசி பின்பு திரயோதசி

நட்சத்திரம்: மாலை 03.01 வரை பூராடம் பின்பு உத்திராடம்

யோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்

நல்ல நேரம் : காலை 07.30 – 08.30 மாலை 04.30 – 05.30

மகர லக்னம் இருப்பு : 00 நாழிகை 42 வினாடி

மேஷம் : உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் சாதகமாக அமையும். எதிர்பார்த்த தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நன்மையளிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் திடீரென குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.

ரிஷபம் : உத்தியோகம் தொடர்பான முடிவுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் மூலம் பொறுப்புகள் அதிகரிக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மனதில் தேவையற்ற சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் குழப்பமும், காலதாமதமும் உண்டாகும். சுரங்கம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

மிதுனம் : எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக கிடைக்கும். வாக்குவன்மையால் இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய எடுத்த முயற்சிகள் மேம்படும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த தடைகள் அகலும். புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும்.

கடகம் : அரசியல் துறைகளில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். தனவரவுகள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான மனக்கவலைகள் குறையும்.

சிம்மம் : மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

கன்னி : மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் ஏற்படும். தனவரவுகள் அதிகரிக்கும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வாழ்க்கைத்துணைவரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். நுட்பமான சிந்தனைகள் மற்றும் திறமைகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள்.

துலாம் : மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருக்கும் எண்ணங்களை பகிர்வதன் மூலம் தெளிவு கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த பணிகள் தொடர்பான எண்ணங்கள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும்.

விருச்சிகம் : புதிய ஒப்பந்தங்களின் மூலம் லாபம் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் குறையும். உறவினர்களின் மூலம் எதிர்பாராத அலைச்சல்களும், செலவுகளும் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களை கவனத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.

தனுசு : வாக்கு சாதுர்யத்தின் மூலம் ஆதரவு கிடைக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நெருக்கடியான சூழ்நிலைகள் மறைந்து சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் நிம்மதியும், புத்துணர்ச்சியும் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனம் மற்றும் மனைகளின் மூலம் லாபம் உண்டாகும். தொழில் அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

மகரம் : மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நல்லது. தொழில் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்க்கவும்.

கும்பம் : உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். பாதியில் நின்ற காரியங்களை செய்து முடிப்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும். உறவினர்களின் ஆதரவினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும்.

மீனம் : மாணவர்கள் எதிர்பார்த்த உயர்கல்வி தொடர்பான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த உதவிகளின் மூலம் எண்ணிய செயல்கள் நிறைவேறும். அரசாங்கத்தின் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த ஆதரவின் மூலம் நன்மை ஏற்படும்.

முதல் டெஸ்ட் போட்டி: கைவசம் 9 விக்கெட்டுகள், 90 ஓவர்களில் 391 ரன்கள் இலக்கை எட்டி மீண்டும் சாதனை படைக்குமா இந்திய அணி?!

0

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 4வது நாளான நேற்று, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கடந்த 5ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஜோ ரூட் 218 (377), டாம் சிப்லி 87 (286) மற்றும் பென் ஸ்டோக்ஸ் 83 (118) ஆகியோரது ரன் குவிப்பால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் குவித்தது.

இந்திய பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரிட் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா, ஷாபாஸ் நதீம் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே சறுக்கியது. ரோஹித் சர்மா 6 (9), சுப்மான் கில் 29 (28), கேப்டன் விராட் கோலி 11 (48) மற்றும் துணை கேப்டன் ரஹானே 1 (6) விக்கெட்டுகளை எளிதில் தாரைவார்த்து அதிர்ச்சியளித்தனர்.

ஓரளவு தாக்குப்பிடித்த சட்டீஸ்வர் புஜாரா 73 (143), அதிரடியாக ஆடி ரன்களை குவித்த ரிஷப் பண்ட் 91 (88) மற்றும் வாஷிங்டன் சுந்தர் 85 (138) ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் சேர்த்து பாலோஆனுக்கு தள்ளப்பட்டது.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இந்திய அணிக்கு வெற்றி இலக்கை நிர்ணயிக்க முடிவு செய்து பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடும் வியூகத்துடன் களமிறங்கினர். ஆனால் அவர்களின் வியூகத்தை சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்ததால் இங்கிலாந்து அணி 178 ரன்களுக்குள் முடங்கியது.

இந்திய அணி தரப்பில், அபாரமாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷாபாஸ் நதீம் 2, இஷாந்த் ஷர்மா, ஜஸ்பிரிட் பும்ரா தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 103 ஓவர்களில் 381 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 12 (20) மீண்டும் ஏமாற்றினார். பின்னர் களமிறங்கிய சட்டீஸ்வர் புஜாரா 12 (23), தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் 15 (35) மேலும் விக்கெட்டுகளை இழக்கா வண்ணம் பார்த்துக் கொண்டனர்.

4ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 13 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் சேர்த்துள்ளது. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ள நிலையில் 90 ஓவர்களில் 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் நிலையில் இன்றைய 5ஆம் ஆட்டத்தை துவங்க உள்ளது.

காரில் இருந்த அதிமுக கொடி அகற்றம்: வேறு காருக்கு மாறிய சசிகலா!.

0

பெங்களூருவில் இருந்து சென்னை புறப்பட்ட சசிகலா, தமிழக எல்லைப் பகுதியில் காரில் இருந்த கொடி கொடி அகற்றப்பட்டதால் வேறு காருக்கு மாறினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று சசிகலா சென்னை திரும்பினார். அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது என காவல்துறை அறிவுறுத்திய நிலையில் காரில் மீண்டும் அதிமுக கொடியுடன் சென்னை புறப்பட்டார் சசிகலா.

காரில் அதிமுக கொடியுடன் தமிழக எல்லையான ஒசூர் ஜூஜூவாடி வந்த நிலையில் சசிகலாவுக்கு அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு சசிகலா வந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டதால் வேறு காருக்கு மாறினார். 

பெங்களூருவில் இருந்த போது அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டிஜிபியிடம் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், அதிமுக மூத்த நிர்வாகிகள் புகார் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 4ஆம் தேதியன்று தமிழக டிஜிபியிடம் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், அமைச்சர்களுடன், கே.பி.முனுசாமி, மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுக முண்ணனி நிர்வாகிகள் மனு அளித்திருந்தனர்.

இன்றைய ராசிபலன்: 08.02.2021 திங்கள் கிழமை சார்வரி வருடம் தை மாதம் 26ம் தேதி, சுபமுகூர்த்தம்.

0

திதி : அதிகாலை 04.34 வரை ஏகாதசி பின்பு துவாதசி

நட்சத்திரம் : மாலை 03.51 வரை மூலம் பின்பு பூராடம்

யோகம் : மாலை 03.51 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்

நல்ல நேரம் : காலை 09.30 – 10.30 மாலை 07.30 -08.30

மகர லக்னம் இருப்பு : 00 நழிகை 52 வினாடி

மேஷம் : மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களிடம் உரையாடும் பொழுது சிந்தித்து செயல்படுவதன் மூலம் தேவையற்ற பகையை தவிர்க்க இயலும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த பொறுப்புகளும், உயர்வுகளும் மேம்படும்.

ரிஷபம் : குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் செயல்பாடுகளில் சற்று தள்ளி இருந்து ஆலோசனைகளை கூறுவது நன்மையளிக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். நண்பர்களின் மூலம் விரயங்களும், அலைச்சல்களும் உண்டாகும்.

மிதுனம் : எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். வாரிசுகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகளுக்கு தீர்வும், தெளிவும் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் புரிதல் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான உடைமைகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

கடகம் : மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு லாபம் அடைவீர்கள். மாணவர்கள் பயணங்களின்போது சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வித்தியாசமான கற்பனைகள் மனதில் ஏற்பட்டு மறையும்.

சிம்மம் : வாரிசுகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவினர்களின் மூலம் தேவையற்ற இன்னல்கள் ஏற்பட்டு மறையும். தேவைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் பண நெருக்கடிகள் குறையும். பயணங்கள் தொடர்பான முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பூர்வீகம் தொடர்பான சொத்துக்களில் பொறுமையுடன் செயல்படுவது அவசியமாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும்.

கன்னி : குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சிறு இடையூறுகளுக்கு பின்பு கிடைக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். பயணங்களின்போது கவனமாக இருக்கவும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

துலாம் : மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். பெரியவர்களிடத்தில் நன்மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். நவீன தொழில்நுட்ப கருவிகள் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.

விருச்சிகம் : எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வாழ்க்கைத்துணைவர் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனதிற்கு பிடித்தவாறு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதாரம் சார்ந்த இன்னல்கள் படிப்படியாக குறையும்.

தனுசு : உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் செயல்பட்டால் லாபம் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சிலருக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் தடைபட்டு வந்த முதலீடுகள் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். பிறமொழி மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.

மகரம் : பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் மத்திமமான சூழ்நிலைகள் உண்டாகும். உடலில் ஒருவிதமான சோர்வும், செயல்பாடுகளில் பொறுப்பின்மையும் ஏற்படும். எதிர்பார்த்த ஆதரவு காலதாமதமாக கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் குறையும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.

கும்பம் : வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபமும், வாடிக்கையாளர்களின் ஆதரவும் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். புதிய செயல்பாடுகளில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மீனம் : மனதில் புதிய நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் உதவிகள் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு திறமைக்கேற்ப பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும்.

வன்னியர் இடஒதுக்கீடு: கிடப்பில் போட்ட அரசு, இன்னொரு போருக்கு தயாராகும் ராமதாஸ்?!

0

தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தனி இட ஒதுக்கீடு கோரி வன்னியர் சங்கத்துடன் இணைந்து பாமக போராடி வருகிறது.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தனி இட ஒதுக்கீடு கோரி 6 கட்டங்களாக பாமக போராடியது. இந்த விவகாரத்தில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு சுமூக முடிவு எட்டப்படவில்லை.

கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 29ஆம் தேதி வரை 6 கட்ட போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது. துவக்கத்தில் தனி இட ஒதுக்கீடு கோரிய பாமக தலைமை பின்னர் உள் ஒதுக்கீடு அளவிற்கு சமரச அறிவிப்பை வெளியிட்டது.

பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தமிழக அமைச்சர்கள் வேலுமணி மற்றும் தங்கமணி ஆகிய இருவரும் டாக்டர் ராமதாசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு மீண்டும் தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.ஏ.அன்பழகன், வேலுமணி மற்றும் தங்கமணி அடங்கிய குழுவினர் டாக்டர் ராமதாசை சந்தித்தனர்.

இதனையடுத்து பிப்ரவரி 3ஆம் தேதி 2 கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால், வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் பாமக தலைமை அடுத்த கட்டமாக மாபெரும் போராட்ட அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

டாக்டர் ராமதாசை பற்றி நன்கு அறிந்தவர்கள், போராடுவது என்று முடிவெடுத்துவிட்டால் அதில் சமரசம் கொள்ளாத பிடிவாத குணம் கொண்டவர் என்று தெரிவித்தனர். டாக்டர் ராமதாசின் போராடும் குணம் குறித்து, கடந்த 30ஆம் தேதி அவர் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஜனவரி 30ஆம் தேதி டாக்டர் ராமதாஸ் வெள்யிட்ட அறிக்கையில், நாம் இதுவரை நடத்தியிருக்கும் 6 கட்ட போராட்டங்களும் நமது இயல்பான போராட்டங்கள் அல்ல. அவை மனு கொடுக்கும் நிகழ்வுகள் தான். தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு இடப்பங்கீடு வழங்குங்கள் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கிராம நிர்வாக அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோர் மூலமாக மனுக்களை அனுப்பி வைக்கும் பணியைத் தான் இதுவரை நாம் செய்திருக்கிறோம்.

ஆகவே, நமது கோரிக்கையை தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும்; அதனால் சத்திரியப் போராட்டத்திற்கு தேவை இருக்காது என்று உறுதியாக நம்புகிறேன். அதையும் மீறி சத்திரியர்களின் குணத்தை வெளிப்படுத்தும் வகையில் போராட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டால், அது சரியான நேரத்தில் அறிவிக்கப்படும். அந்தப் போராட்டத்தை நானே களமிறங்கி தலைமையேற்று நடத்துவேன். அதற்காக காத்திருங்கள் என்று கூறியுள்ளார்.

“போராட்ட களத்தில் இறங்கி நானே தலைமை ஏற்பேன்” என்று டாக்டர் ராமதாஸ் அழுத்தமாக கூறியிருப்பதை சுட்டிக்காட்டி, தமிழக அரசு குறிப்பிட்ட அவகாசத்திற்குள் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவை அறிவிக்கவில்லை என்றால் ராமதாஸ் சொன்னதை செய்வார் என்று தெரிவித்தனர்.

முதல் டெஸ்ட் போட்டி: 3 நாளும் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து, பாலோ ஆனை தவிர்க்க சுந்தர் அஸ்வின் போராட்டம்.

0

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கடந்த 5ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்டத்தில் கேப்டன் ஜோ ரூட் 128* (197) சதம் விளாச, டாம் சிப்லி 87 (286) கடைசி ஓவரில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் சேர்த்தது.

இரண்டாம் நாளில் ஜோ ரூட்டுடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ் 83 (118) சரவெடியாய் வெடித்தார். 2ம் நாளில் மேலும் 90 ரன்கள் விளாசிய ஆட்டமிழந்த ஜோ ரூட் 218 (377), 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமை பெற்றார். ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 555 ரன்கள் குவித்தது.

3ம் நாளும் தொடர்ந்த இங்கிலாந்து இன்னிங்ஸ் டாம் பெஸ் 34 (105), ஜேம்ஸ் ஆண்டர்சன் 1 (12) விக்கெட்டுகள் விழுந்ததும் முடிவுக்கு வந்தது. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து 578 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் ஜஸ்பிரிட் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா, ஷாபாஸ் நதீம் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே சறுக்கியது. ரோஹித் சர்மா 6 (9), சுப்மான் கில் 29 (28) விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். பின்னர் களமிறங்கிய புஜரா 14 (22) ஒருபுறம் போராட, கேப்டன் விராட் கோலி 11 (48), ரஹானே 1 (6) வந்தவுடன் நடையை கட்டினர்.

பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட், புஜாராவுடன் இணைந்து அதிரடியாக ஆடி ரன் விகிதத்தை உயர்த்தினார். 25 ஓவர்கள் தாக்குப் பிடித்த இந்த ஜோடி, டாம் பெஸ் பந்துவீச்சில் சட்டீஸ்வர் புஜாரா 73 (143) ஆட்டமிழந்ததும் பிரிந்தது. அதன் பிறகு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார்.

ஒருநாள் போட்டியை போன்று அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட், ஜாக் லீச்சின் பந்துகளை நொறுக்கினார். அவரது 3 ஓவர்களில் 4 சிக்ஸர்களை விளாசி மிரள வைத்தார். ரிஷப் பண்ட்டை அவுட்டாக்க ஜோ ரூட் ஒரு ஓவர் பந்து வீசினார். அடுத்த ஒவரில் டாம் பெஸ் பந்துவீச்சில் ஜாக் லீச்சிடம் கேட்ச் கொடுத்த ரிஷப் பண்ட் 91 (88) வெளியேறினார்.

பின்னர் இணைந்த தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் 33 (68) ரவிச்சந்திரன் அஸ்வின் 8 (54) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் அபாரமாக பந்து வீசிய டாம் பெஸ் 4 விகெட்டுகளையும், ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தமிழ்நாட்டில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி: பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேச்சு.

0

தமிழகத்தில் வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க தனித்து போட்டியிட தயார் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க தனித்து போட்டியிட தயார் என்று செங்கல்பட்டில் நடைபெற்ற தேமுதிக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் இவ்வாறு பேசியுள்ளார்.

திருப்போரூர், செய்யூர், செங்கல்பட்டு தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் செங்கல்பட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.கவுக்கு தனித்து போட்டியிடுவது புதிதல்ல என்றும் தமிழக அரசியல் வரலாற்றிலேயே தேர்தலில் தனித்து களம் காணமுடியும் என்று நிருபித்துக் காட்டியது தே.மு.தி.க மட்டும்தான்.

தமிழ்நாட்டில் எனக்கு பிடிக்காத வார்த்தை ஒன்று இருக்குமானால், அது கூட்டணி என்ற வார்த்தைதான். என்னை பொறுத்தவரைக்கும் கூட்டணி என்பது பிடிக்காது. இப்போதும் சரி தலைவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும் தமிழகத்தில் 234 தொகுதிகளில் உள்ள் பொறுப்பாளர்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக உள்ளனர்.

தலைவர் அறிவித்தால் போதும், மற்றவை எல்லாம் தானாக நடக்கும். இருந்தாலும் நாம் பொறுமை காக்கின்றோம், எதற்காக பொறுமை காக்கின்றோம் என்றால் வெற்றி, வெற்றி என்கிற ஒற்றை இலக்கிற்காக பொறுமை காக்கின்றோம் இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தின் ஆட்டத்திற்கு முடிவுகட்டிய அஸ்வின்!.

0

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 578 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கடந்த 5ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.

8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 555 ரன்களுடன், 3ஆம் நாள் ஆட்டத்தை டாம் பெஸ், ஜாக் லீச் இணையுடன் இங்கிலாந்து அணி துவங்கியது. நீண்ட நேரம் தண்ணி காட்டிய டாம் பெஸ் 34 (105) ரன்களுடன் பும்ரா பந்துவீச்சில் எல்.பி.டபுல்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கி பந்துகளை தொடவே யோசித்துக் கொண்டிருந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் 1 (12) ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது, அஸ்வின் சுழற்றி வீசிய பந்தை தொடமுடியாமல் போல்ட் ஆனார். அத்துடன் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

முன்னதாக இந்த போட்டியில் பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனை புரிந்த ஜோ ரூட் 218 (377) கடைசியாக விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 644 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறினார். 2வது இடத்திற்கு முன்னேற இன்னும் 434 ரன்களே தேவைப்படுவதால் இந்த தொடரிலேயே அதனை சாதிக்கவும் வாய்ப்புள்ளது.

இந்திய தரப்பில் ஜஸ்பிரிட் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா, ஷாபாஸ் நதீம் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா 6 (9), சுப்மான் கில் 29 (28) ரன்களில் ஆட்டமிழந்தனர். புஜரா 14 (22) கேப்டன் விராட் கோலி 2 (5) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.