Wednesday, May 12, 2021
Home Blog Page 2

2வது டெஸ்ட் போட்டி: சதம் கடந்து அசத்தல், புதிய சாதனை படைத்த அஸ்வின்.

0

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1 – 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 329 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியினர், சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விக்கெட்டுகளை பறி கொடுத்து தடுமாறினர். கடந்த போட்டியில் இரட்டை சதம் விளாசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 6 (12) ரன்களில் ஆட்டமிழந்தார்.

மொத்தம் 4 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் அதிகபட்சமாக 42 (107) குவித்ததுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, அக்ஸர் பட்டேல் தலா 2, முகமது சிராஜ் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

195 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்தது. 3ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 

இதனை தொடர்ந்து களமிறங்கிய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் ஒரே டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு 50க்கு மேற்பட்ட ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் மூன்றாவதாக இணைந்துள்ளார். இந்த போட்டியில் அதிக ரன்களை குவித்ததும் அஸ்வின் என்ப்து குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் இயான் போத்தம் 11 போட்டிகளில் இந்த சாதனை புரிந்ததன் மூலம் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் 9 போட்டிகளுடன் 2ஆம் இடத்தை வகிக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் 6 போட்டிகளில் இந்த சாதனையை புரிந்ததன் மூலம், நியூசிலாந்தின் ரிச்சர்டு ஹார்டுலியுடன் மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

வாட்ஸ் அப் விவகாரம்: புதிய கொள்கைக்கு நீதிபதிகள் எதிர்ப்பு.

0

வாட்ஸ் அப் விவகாரத்தில் மக்களின் மக்களின் தனியுரிமையை பாதுகாக்க நீதிமன்றம் தலையிட வேண்டியிருக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி தளமான வாட்ஸ் அப், அண்மையில்  தனியுரிமை கொள்கையில் மாறுபாடு செய்தது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் எழுப்பியதோடு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் தனியுரிமை கொள்கை மாறுபாட்டை ஃபேஸ்புக் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இதற்கிடையே, வாட்ஸ் அப்பின் புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, வாட்ஸ் அப், பேஸ்புக்  ஆகியவை பதிளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது. 

முன்னதாக விசாரணையின் போது, தங்களது தனிப்பட்ட தகவல்களை மக்கள் பெரிதாக  கருதுவதாக கூறிய நீதிபதிகள், மக்களின் தனியுரிமையை பாதுகாக்க நீதிமன்றம் தலையிட வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளனர். 

இன்றைய ராசிபலன்: 15.02.2021 திங்கள்கிழமை சார்வரி வருடம் மாசி மாதம் 03ம் தேதி, சதுர்த்தி.

0

திதி : அதிகாலை 02.57 வரை திருதியை பின்பு சதுர்த்தி

நட்சத்திரம் : இரவு 07.26 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி

யோகம் : காலை 06.33 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்

நல்ல நேரம் : காலை 06.30 – 07.30 மாலை 04.30 – 05.30

கும்ப லக்னம் இருப்பு : 04 நாழிகை 25 வினாடி

மேஷம் : புதுவிதமான இடத்திற்கு சென்று வருவீர்கள். தொழிலில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றங்கள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உணர்வு ஏற்படும். வெளிநாட்டு பயணங்களில் இருந்துவந்த தடைகள் அகலும்.

ரிஷபம் : தொழிலில் செல்வாக்கு உயரும். சுயதொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆராய்ச்சி சம்பந்தமான தேடலில் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பணியில் அங்கீகாரம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். திருமண வரன்கள் கைகூடும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இடர்பாடுகள் நீங்கும்.

மிதுனம் : வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். ஆபரணங்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். பயணங்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். கவனக்குறைவால் பிறரிடம் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.

கடகம் : வேலை தொடர்பான முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். தொழிலில் கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழில் திறமைகள் வெளிப்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். நீர்வழி தொழில்களின் மூலம் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும்.

சிம்மம் : சுரங்கம் தொடர்பான பணியில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். மனதில் ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டு மறையும். கடன் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் இறக்கமான சூழல் அமையும். மாணவர்கள் போட்டிகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடும்போது விழிப்புணர்வுடன் செயல்படவும்.

கன்னி : புத்திரர்களின் செயல்பாடுகளினால் பெருமை உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.

துலாம் : உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். செயல்படும் விதத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். ஆன்மிக பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.

விருச்சிகம் : தாய்வழி உறவுகளால் ஆதரவான சூழல் ஏற்படும். எடுத்த பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். மனை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். வெளிநாட்டு பயணங்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும்.

தனுசு : நண்பர்களின் மூலம் முன்னேற்றமான சூழல் அமையும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. செய்யும் செயல்களில் திருப்திகரமான சூழல் அமையும். பணியில் இருந்தவந்த மந்தத்தன்மை நீங்கும். உடன் பணிபுரியும் ஊழியர்களால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். கால்நடைகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். தொழிலில் புதிய முடிவுகளால் மேன்மை உண்டாகும்.

மகரம் : மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவதற்தான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத பணவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் இணைந்து விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். முன்னேறுவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சாதகமாகும். திட்டமிட்ட பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள்.

கும்பம் : பணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். தேவையற்ற செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். கலை சார்ந்த அறிவு மேம்படும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தொழிலை விரிவுப்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே செல்வாக்கு அதிகரிக்கும்.

மீனம் : உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இறைவழிபாடுகளால் மனம் தெளிவுப்பெறும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் குழப்பங்கள் ஏற்படும். மனதில் சுதந்திர மனப்பான்மை அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

2வது டெஸ்ட் போட்டி: அஸ்வின் சுழலில் நிலைகுலைந்த இங்கிலாந்து 134க்கு ஆல் அவுட்.

0

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1 – 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி தரப்பில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 161 (231), துணை கேப்டன் ரஹானே 67 (149) மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 58* (77) ஆகியோரின் ரன் குவிப்பால் முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியினர், சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விக்கெட்டுகளை பறி கொடுத்து தடுமாறினர். கடந்த போட்டியில் இரட்டை சதம் விளாசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 6 (12) ரன்களில் ஆட்டமிழந்தார்.

மொத்தம் 4 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் அதிகபட்சமாக 42 (107) குவித்ததுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, அக்ஸர் பட்டேல் தலா 2, முகமது சிராஜ் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

2வது டெஸ்ட் போட்டி: சுழலில் சிக்கி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.

0

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1 – 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணிக்கு, ஒரு முனையில் துவக்க வீரர் ரோகித் சர்மா அபாராமாக ஆடினார்.

மறு முனையில் விக்கெட்டுகள் சரிந்தன. சுப்மான் கில், விராட் கோலி டக் அவுட்டில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். துணை கேப்டன் ரஹானே 67 (149) ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 161 (231) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 88 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்கள் குவித்து இருந்தது. ரிஷப் பண்ட் 33 (56), அக்ஸர் பட்டேல் 5 (7) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச், மொயின் அலி தலா 2 விக்கெட்டுகளையும் ஸ்டோன், ஜோ ரூட் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

300 ரன்களுடன் 2ஆம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 58 (77) ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியின் சுழல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது. இங்கிலாந்து அணி உணவு இடைவேளை வரை 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்து தடுமாறியது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மேலும் 1 விக்கெட்டை இழந்து தத்தளித்து வருகிறது

இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா, அக்சர் படேல் தலா 1 விக்கெட்டையும் எடுத்துள்ளனர். போப் 8 (19) பென் ஃபோக்ஸ் 0 (5) ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

இன்றைய ராசிபலன்: 14.02.2021 ஞாயிற்றுக்கிழமை சார்வரி வருடம் மாசி மாதம் 02ம் தேதி, கீழ்நோக்குநாள்.

0

திதி : அதிகாலை 01.45 வரை துவிதியை பின்பு திரிதியை

நட்சத்திரம் : மாலை 05.33 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி

யோகம் : காலை 06.33 வரை மரணயோகம் பின்பு மாலை 05.33 வரை சித்தயோகம் அதன் பின்பு அமிர்தயோகம்

நல்ல நேரம் : காலை 06.00 – 07.00 மாலை 03.30 – 04.30

கும்ப லக்னம் இருப்பு : 04 நாழிகை 35 வினாடி

மேஷம் : எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். தூரத்து உறவினர்களின் சந்திப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். தடைபட்டு வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் சாதகமாக அமையும்.

ரிஷபம் : சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். மூத்த சகோதரர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் மூலம் லாபம் மேம்படும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். மறைந்திருந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

மிதுனம் : கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பாதியில் நின்ற பணிகள் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் சிந்தித்து செயல்படவும். தொழில் தொடர்பான புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ளவும்.

கடகம் : எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தந்தைவழி சொத்துக்களின் மீதான வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும்.

சிம்மம் : எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனத்துடன் இருக்கவும்.

கன்னி : குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசும், பாராட்டுகளும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். புதுவிதமான சிந்தனைகளும், புதிய நபர்களின் அறிமுகமும் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

துலாம் : சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்களுக்கு பெரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாறுபட்ட சூழ்நிலைகள் ஏற்படும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். நிதிநிலையில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.

விருச்சிகம் : கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மனதில் தோன்றும் குழப்பங்களை அவ்வப்போது நிவர்த்தி செய்வது நல்லது. உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தனவரவுகள் அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு : மனதில் இருக்கும் எண்ணங்களை அமைதியான முறையில் செயல்படுத்துவதன் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு இன்னல்கள் ஏற்பட்டு மறையும். திட்டமிட்ட காரியங்கள் சிறு அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் ஆதாயம் மேம்படும். பயணங்களின் மூலம் பணவரவுகள் அதிகரிக்கும்.

மகரம் : மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றவருடன் பகிர்வதன் மூலம் தெளிவு கிடைக்கும். தொழில் தொடர்பான முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். உணவு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். புதிய முயற்சிகள் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உலக வாழ்க்கை பற்றிய புரிதலும், கண்ணோட்டங்களில் மாற்றமும் உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடுகளில் கவனம் வேண்டும்.

கும்பம் : உடனிருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளின் ஆதரவினால் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும்.

மீனம் : கண்பார்வை தொடர்பான சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். மனதில் பலதரப்பட்ட எண்ணங்களினால் குழப்பமான சூழ்நிலைகள் உண்டாகும். பொதுக்காரியங்களில் உள்ளவர்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். தடைபட்ட வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும்.

2வது டெஸ்ட் போட்டி: சரிந்து நிமிர்ந்த இந்தியா, 6 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவிப்பு.

0

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1 – 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன் படி இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஆட்டத்தை துவங்கிய சுப்மான் கில் 0 (3) ஏமாற்றம் அளித்தார். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய சட்டீஸ்வர் புஜாரா 21 (58) ஜாக் லீச் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஒரு முனையில் ரோகித் சர்மா இங்கிலாந்து பந்திவீச்சாளர்களை வெளுத்து வாங்க, பலத்த எதிர்பார்ப்புடன் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 0 (5) மொயின் அலியின் பந்து வீச்சில் போல்ட் ஆகி ஏமாற்றமளித்தார்.

பின்னர் ரோஹித் சர்மாவுடன் இணைந்த துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே பொறுப்புடன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது. 51.4 ஓவர்கள் நிலைத்து நின்று ஆடிய இந்த ஜோடி 162 ரன்கள் சேர்த்து இந்திய அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர்.

அவப்போது பந்துகளை பவுண்டரி எல்லைக்கு விரட்டி ரசிகர்களை குஷிப்படுத்திய ரோஹித் சர்மா 150 ரன்களை கடந்தார். நல்ல நிலையில் ஆடிக் கொண்டிருந்த போது இரட்டை சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா 161 (231) ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் களமிறங்க, மேலும் 1 ரன் எடுத்த நிலையில் ரஹானே 67 (149) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 13 (19) நிலைக்கவில்லை. பின்னர் களமிறங்கிய அக்ஸர் பட்டேல் ரிஷப் பண்ட்டுடன் இணைந்து மேலும் விக்கெட்டுகளை இழக்காவண்ணம் பார்த்துக் கொண்டார்.

இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்துள்ளது. ரிஷப் பண்ட் 33 (56), அக்ஸர் பட்டேல் 5 (7) ரன்களுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச், மொயின் அலி தலா 2 விக்கெட்டுகளையும் ஸ்டோன், ஜோ ரூட் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

2வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு.

0

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1 – 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இதன் மூலம் சேப்பாக்கத்தில் 22 ஆண்டுகளாக இந்திய அணி தோற்றதில்லை என்ற பெருமையை இழந்தது. இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், இரட்டை சதம் உட்பட இரண்டு இன்னிங்ஸ்சிலும் சேர்த்து 258 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார்.

மீண்டும் 2வது டெஸ்ட் போட்டியில் அதே மைதானத்தில் இரு அணிகளும் மோத உள்ளதால், கடந்த டெஸ்ட் தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அவகாசம் இல்லாததால் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இன்று தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் 50% இருக்கைகளில் அமரும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த போட்டியில் முதல் 2 நாட்கள் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மைதானம் முதல் நாளில் இருந்தே பந்துகள் சுழன்று திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக பிட்ச் பராமரிப்பாளர் கூறியுள்ளார்.

2வது டெஸ்ட் போட்டிக்கான இரு அணி வீரர்கள் விபரம்:

இரு அணி வீரர்கள் விவரம்:-

இந்தியா :- ரோஹித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், அக்ஸர் பட்டேல்.

இங்கிலாந்து :- ஜோ பர்ன்ஸ், டாம் சிப்லி, டான் லாரன்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், போப், பென் ஃபோக்ஸ், மொயின் அலி, ஜாக் லீச், ஸ்டூவர்ட் பிராட், ஸ்டோன்.

2வது டெஸ்ட் போட்டி: கோட்டையை கைப்பற்றி பதிலடி கொடுக்குமா இந்தியா?!.

0

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1 – 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இதன் மூலம் சேப்பாக்கத்தில் 22 ஆண்டுகளாக இந்திய அணி தோற்றதில்லை என்ற பெருமையை இழந்தது. இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், இரட்டை சதம் உட்பட இரண்டு இன்னிங்ஸ்சிலும் சேர்த்து 258 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார்.

மீண்டும் 2வது டெஸ்ட் போட்டியில் அதே மைதானத்தில் இரு அணிகளும் மோத உள்ளதால், கடந்த டெஸ்ட் தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அவகாசம் இல்லாததால் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இன்று தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் 50% இருக்கைகளில் அமரும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த போட்டியில் முதல் 2 நாட்கள் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மைதானம் முதல் நாளில் இருந்தே பந்துகள் சுழன்று திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக பிட்ச் பராமரிப்பாளர் கூறியுள்ளார்.

2வது போட்டிக்கான இந்திய அணியில் அக்ஸர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே இந்திய அணி ஆடும் லெவனில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் நதீமுக்கு பதிலாக அக்ஸர் பட்டேல் களமிறங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு துவங்குகிறது.

இன்றைய ராசிபலன்: 13.02.2021 சனிக்கிழமை சார்வரி வருடம் மாசி மாதம் 01ம் தேதி, மேல்நோக்குநாள்.

0

திதி : அதிகாலை 01.12 வரை பிரதமை பின்பு துவிதியை

நட்சத்திரம் : மாலை 04.02 வரை சதயம் பின்பு பூரட்டாதி

யோகம் : காலை 06.34 வரை சித்தயோகம் பின்பு மாலை 04.02 வரை அமிர்தயோகம் அதன் பின்பு மரணயோகம்

நல்ல நேரம் : காலை 07.30 – 08.30 மாலை 04.30 – 05.30

கும்ப லக்னம் இருப்பு : 04 நாழிகை 45 வினாடி

மேஷம் : மனதில் புதுவிதமான வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமான பலன்களை அளிக்கும். வசதி வாய்ப்புகள் மேம்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.

ரிஷபம் : உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

மிதுனம் : எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதுவிதமான ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் தோன்றும். புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நிர்வாகத்திறமை வெளிப்படும். நிலுவையில் இருந்துவந்த பண வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.

கடகம் : எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். செய்யும் பணிகளில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகள் எடுப்பதில் கவனத்துடன் இருக்கவும். வீண் பிரச்சனையால் மனக்குழப்பங்கள் ஏற்படும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தடைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

சிம்மம் : தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்களில் லாபம் மேம்படும். வியாபாரம் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மூத்த சகோதரர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும்.

கன்னி : எந்தவொரு காரியத்தையும் சிந்தித்து செயல்படுத்தவும். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பழைய கடன்களை அடைப்பதற்கான சூழல் உண்டாகும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு ஆதரவான சூழல் ஏற்படும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.

துலாம் : நிர்வாகத்தில் தனித்திறமைகள் புலப்படும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும். புண்ணிய தலங்களுக்கான யாத்திரையை மேற்கொள்வீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும்.

விருச்சிகம் : எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு லாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் ஏற்படும். கால்நடைகளால் சில விரயங்கள் ஏற்படும். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுபவிரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு : புதிய தொழில் முயற்சிகளால் சுபவிரயங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருட்களை மீட்பதற்கான முயற்சிகளை செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளை பெறுவீர்கள்.

மகரம் : குடும்ப உறுப்பினர்களால் ஆதரவான சூழல் உண்டாகும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு எடுத்துரைக்கின்ற பேச்சுக்களால் நற்பலன்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும்.

கும்பம் : மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். பொருள் சேர்ப்பதற்கான சாதகமான சூழல் உண்டாகும். விவாதங்களின் மூலம் அனுகூலமான சூழல் அமையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனத்துடன் செயல்படவும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். போட்டித்தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

மீனம் : வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். தொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் சுபவிரயங்கள் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்லூரி படிப்பிற்கான சுபவிரயங்கள் உண்டாகும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் விழிப்புணர்வு வேண்டும்.