Wednesday, May 12, 2021
Home அரசியல் ஃப்ரீஸ், அட்டென்ஷன்: பிக்பாஸ் வீடாக மாறிய திமுகவின் உலக சாதனை முயற்சி!.

ஃப்ரீஸ், அட்டென்ஷன்: பிக்பாஸ் வீடாக மாறிய திமுகவின் உலக சாதனை முயற்சி!.

தமிழகம் சிறக்க, தமிழர்தம் வாழ்வு தழைக்க உதிக்கட்டும் உதயசூரியன் - திமுகவின் உலக சாதனை முயற்சி.

தமிழகம் சிறக்க, தமிழர்தம் வாழ்வு தழைக்க உதிக்கட்டும் உதயசூரியன் என்ற பெயரால் உலக சாதனை முயற்சி ஒன்று திமுக சார்பில் நடத்தப்பட்டுள்ளது.

சென்னை – கொட்டிவாக்கம் சாலையில் உள்ள YMCA மைதானத்தில் 6000 இளைஞர்கள் உதயசூரியன் வடிவில் நின்று சாதனை புரிந்துள்ளதாக, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த உலக சாதனை முயற்சி சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தேறியது. இதில் மேடையில் இருந்த சுப்ரமணியன் பிக்பாஸாக மாறி அனைவரையும் ஆட்டிப்படைத்தது தெரியவந்துள்ளது.

அட்டென்ஷன், ஃப்ரீஸ் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி பங்கேற்பாளர்களையும், மஞ்சள் கேட் அங்கே யாரும் நிற்க கூடாது, இந்த கேட்டை திற, தலைவர் கார் மட்டும் வரட்டும், நிர்வாகிகள் யாரும் தடுப்புகளை தாண்டி வரவேண்டாம். மணி, பிரியாணி மணி நீ ஏன் அங்கே நிற்கிறாய் அங்கே நிற்ககூடாது.

அட்டென்ஷன்ல நில்லுங்க, பாக்கெட்டுக்குள்ள கையவிட்டுக்கோங்க, இந்த மாதிரி ஒரு சாதனையை தமிழகத்தில் வேறு எந்த அரசியல் இயக்கமும் நினைத்துகூட பார்க்க முடியாது. ஏனெனில் திமுகவில் இருப்பது போன்ற ஒழுக்கமான தொண்டர்கள் வேறு இயக்கங்களுக்கு இல்லை.

அந்த ரெட் டீ சர்ட் போட்டவர் எதுக்கு மூவ் பண்றாரு, நேரா நில்லுங்க. இப்படியொரு உலக சாதனையை, வேறெங்கும் காணமுடியாத சாதனையை திமுக நிகழ்த்தி காட்டியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments